Take a fresh look at your lifestyle.

சிங்கப்பெண்களை பற்றி பேசும் படம் ஆட்டி

1

சிங்கப்பெண்களை பற்றி பேசும் படம் ஆட்டி
பெட்டிக்கடை, தமிழ்க் குடிமகன், பரமசிவன் பாத்திமா உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ஆட்டி.இதில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண் ணனே கதையின் நாயகனாக ஒரு காவல் துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார். இதில் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். பழந்தமிழர் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்ற தைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல் களையும், அதைக் கையாண்டு வெற்றி பெற்ற நமது சிங்கப்பெண்கள் பற்றியும் பேசுகிறது. இப்படம் இன்று 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.