Take a fresh look at your lifestyle.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாக கைவிட அரசு முடிவு செய்துள்ளது.

5

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றி மின் பயன்பாட்டை கணக்கிடும் ரூ.20,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாக கைவிட அரசு முடிவு செய்துள்ளது. மொத்தம் 3.04 கோடி மீட்டர்களை பொருத்த திட்டமிடப்பட்டு 50 நிறுவனங்கள் இதற்கான டெண்டரில் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது அந்த டெண்டர்களை திறக்காமலேயே ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் திட்ட செலவினங்களை கருத்தில் கொண்டு இந்த முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.