Take a fresh look at your lifestyle.

நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

2

நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.