Take a fresh look at your lifestyle.

ராம்சரனின் பெத்தி ரிலீஸ் தேதிஅறிவிப்பு

31

ராம்சரனின் பெத்தி ரிலீஸ் தேதிஅறிவிப்பு
ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா படமான பெத்தி ஜூன் 4 ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. இதில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு , ஏ .ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.