அனிஷ்மா நடிக்கும் ‘மொத ராத்திரி’ ‘குட் பேட் அக்லி’
படத்துக்கு பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுத்து தமிழில் 3 வதாக தயாரிக்கும் படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்த், ஹீரோவாக நடிக்க, ‘சிறை’ மற்றும் ‘யூத்’ படம் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார்ஹீரோயின் ஆக நடிக்கிறார்.வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் ‘மொத ராத்திரி’ படத்தின் கதை.
Next Post