Take a fresh look at your lifestyle.

ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை: ரம்யா ரங்கநாதன் .

38

ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை: ரம்யா ரங்கநாதன் .
தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா ரங்கநாதன். தற்போது ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் மீசைய முறுக்கு-2 மற்றும் ஜமா படை இயக்குனர் பாரி இளவழகனின் அன்பே டயானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது, ஹிப் ஹாப் ஆதியின் தீவிர ரசிகை. மீசைய முறுக்கு படத்தில் இடம் பெற்ற வாடிபுள்ள வாடி பாடல் ஒலித்த போது நான் அழுதுவிட்டேன். இப்போது அதன் 2-ம் பாகத்தில் நடிப்பது உற்சாகமாக உள்ளது.மீசைய முறுக்கு-2 படத்தில் தமிழ் பெண்ணாகவும், அன்பே டயானா படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாகவும் நடிக்கிறேன்.இந்த 2 கதாபாத்திரங்களும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை போல் ஒன்றுக்கொன்று முற்றிலும்
வேறுபட்டவை. ஒரே மாதிரியான கேரக்டரில் நான் நடிக்க விரும்பவில்லை என்றார்.