பிரியங்கா மோகனுக்கு கிடைத்த அங்கீகாரம்
ரா. கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடிப்பில், ரைஸ் ஈஸ்ட் என்டர் டெயின்மென்ட் தயாரித்த ‘மேட் இன் கொரியா’ படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகி உலகளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ராஷ்டிரபதி பவன் விருந்தில் படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் கலந்துகொண்டதன் மூலம் இந்தப் படம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.