Take a fresh look at your lifestyle.

மீண்டும் சித்தார்த்துடன் ஜோடி சேரும் திரிஷா

91

மீண்டும் சித்தார்த்துடன் ஜோடி சேரும் திரிஷா
சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்துள்ள த்ரிஷா அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் சித்தார்த் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ள தாகவும், புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க வுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜோடி முதன்முதலில் மணி ரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நுவ்வோஸ் தானந்தே நேனோடண்டானா’ படத்திலும், கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 2’ படத்திலும் இணைந்து நடித்துள்ளனர்.நான்காவது முறையாக தெலுங்கு படத்தில் ஜோடி சேர உள்ளனர்.