‘ பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ வெப் சீரிஸ் ரெடி
ஜியோ ஹாட்ஸ்டாரில் இதற்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் தயாரிப்பு குழுவின் அடுத்த தொடர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ். நவீன குடும்ப உறவுகளை புதுமையாகவும் அதே நேரம் ரசிக்கும்படியாக சொல்லி உள்ளனர். இந்தத் தொடரில் போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்த்ரி முக்கிய ரோலில் நடிக்கின்றனர். மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸை ‘உப்பு புளி காரம்’, ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். அடுத்த மாதம் முதல் ஜியோஹாட்ஸ்டாரில் இத்தொடர் ஒளிபரப்பாகும்.
Next Post