Take a fresh look at your lifestyle.

லீடர் விமர்சனம்

3

லீடர் விமர்சனம்
தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தனது மகளையே உலகமாக நினைத்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் துறைமுகத்துக்கு மர்மமாக வரும் ஒரு கண்டெய்னர் அவருடைய வாழ்க்கையே புரட்டி போடுகிறது. அந்த மர்மத்தை ஆராயும் போலீஸ் அதிகாரி ஆன்ட்ரியா,சரவணைன ஒரு பகைடக்காயாக பயன்படுத்துகிறார். இதனால் தாதாக்களோடு சரவணனுக்கு மோதல் ஏற்படுகிறது. அந்த ஆபத்திலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே படத்தின் மீதி கதை. ஆக்ஷன் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் இதில் மாஸ் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் வெறித்தனத்தால் அரங்கம் அதிர்கிறது. அதேசமயம் மகளுக்காக துடிக்கும் காட்சிகளில் பாசம் காட்டி நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக ஆண்ட்ரியா,
வில்லன்களாக சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளனர்கதாநாயகி பாயல் ராஜ்புத், காதல் காட்சிகளில் கவர்ச்சியும், பிளாஷ்பே க்கில் சோகமும் கலந்து நடித்துள்ளார். ஷாம், லால், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிப்பு ஓகே.இயக்குனர் துரை செந்தில்குமார், கதை சொல்லலில் ஹாலிவுட் டச் கொடுத்துள்ளார். வெங்கேடஷ்.எஸ் ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரான் இசை படத்திற்கு பலம்.