Take a fresh look at your lifestyle.

ராஷ்மிகாவுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

2

ராஷ்மிகாவுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்
நடிகை ராஷ்மிகாவுக்கு மற்றொரு கவுரவம் கிடைத்துள்ளது.ஜப்பானில் நடைபெற உள்ள மிகவும் மதிப்புக்குரிய விருது விழாவான க்ரஞ்சி ரோல் அனிமே விருது வழங்கும் விழாவில் அவர் 2-வது முறையாக பங்கேற்க இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு இதே மேடையில் ஜொலித்த ராஷ்மிகா, மீண்டும் அதே மேடையில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுக்க உள்ளார். இது போன்ற கவுரவத்தை 2 முறை பெரும் முதல் இந்திய திரை உலக பிரபலம் என்ற சாதனையை ராஷ்மிகா படைத்துள்ளா ர். இந்த விருது விழா வருகிற மே மாதம் 23-ந் தேதி டோக்கியாவில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் ஹாலிவுட்பிரபலங்களுடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு
விருதுகளை அவர் வழங்குகிறார்.