Take a fresh look at your lifestyle.

தீபாவளிக்கு அரசன் வருகிறான்

106

தீபாவளிக்கு அரசன் வருகிறான்
சிலம்பரசன் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ படம் குறித்த அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி வருகிறது.இப்போது 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ‘வட சென்னை’ ஏரியா தொடர்புடைய கதை என்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். திட்டமிட்டபடி மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் முதல் வாரத்திற்குள் சூட்டிங் முடிந்து இறுதி கட்டப் பணிகள் துவங்க உள்ளது. இதனால் படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர் தானு திட்டமிட்டுள்ளார். அதன் படி, நவம்பர் 5 அல்லது 6 தேதி ‘அரசன்’ வெளியாகும் என தெரிகிறது.