ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்கிறாரா ஆண்ட்ரியா?
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தின் 2-ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் குறித்து நடிகை ஆண்ட்ரியா கூறிய கருத்துகள் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்தநிகழ்ச்சி ஒன்றில் ஆண்ட்ரியாவிடம் ஆயிரத்தில் ஒருவன்-2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா, ஆயிரத்தில் ஒருவன்-2 படம் உருவாவதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் அதில் நான் நடிக்கமாட்டேன். இதற்கு காரணம் செல்வராகவனுடன் பணி புரிவது மிக கடினம். முதல் பாகத்திற்காக சுமார் 200 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது என்றார்.
Prev Post