தன் டீச்சருக்காக பிரச்சாரம் செய்யும் நிகிலா விமல்
வெற்றிவேல், கிடாரி, வாழை போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நிகிலா விமல். இந்நிலையில் கேரளாவில் நடைபெற உள்ள தேர்தலையொட்டி கண்ணூர் தளிபரம்பா தொகுதியில் எல்.டி.எப். வேட்பாளராக போட்டியிடும் பள்ளி ஆசிரியை ஷியாமளா வுக்கு ஆதரவாக நிகிலா பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் நிகிலா விமல் பேசும் போது, ‘ஷியாமளா ஆசிரியை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரிந்தவர்.அதனால் நான் அவருக்காக பிரசாரம் செய்கிறேன்.அவர் சிறுவயதில் இருந்தே மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். வளர்ச்சி தொடர வேண்டுமென்றால் ஷியாமளா ஆசிரியைக்கு வாக்களிக்க வேண்டும்’ என கூறினார்.
Next Post