Take a fresh look at your lifestyle.

சூரிக்கு ஜோடியாகும் மமீதா பைஜூ

100

சூரிக்கு ஜோடியாகும் மமீதா பைஜூ
நடிகர் சூரி தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாட்டி’படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் நடிக்கும் 7-வது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை ‘நேற்று இன்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்படம் 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜுவை படக்குழு அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.