சல்மான் கான் ஜோடியான நயன்தாரா
தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக உள்ள நயன்தாரா கடந்த 2023-ம் ஆண்டு முதன் முதலில் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்தப் படம் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை பெற்றது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த நயன்தாரா மீண்டும் ஒரு இந்தி படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தினராஜ் தயாரிக்க,பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைட பள்ளி இயக்குகிறார்.