Take a fresh look at your lifestyle.

தரிசனம் தந்தார் குடந்தை அத்திவரதர்

134

 

தந்தார் குடந்தை அத்திவரதர்
கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையிலிருந்து வெளிவந்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்

கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான, சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு, மீண்டும் பாதாள அறைக்கு கொண்டு செல்லப்படும்.
1915-ம் ஆண்டுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்கப்படவில்லை. 98 ஆண்டுகளுக்கு பிறகு 2013-ம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது.

பின்னர் அந்த சிலை மீண்டும் பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்தநிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை பாதாள அறையிலிருந்து எடுக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ளது இதனை இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்
இன்று முதல் வரும் மார்ச் 10-ம் தேதி வரை இந்த சிலையை பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது.