Take a fresh look at your lifestyle.

நானிக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்

1

நானிக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்
பிரபல தெலுங்கு நடிகரான நானி, தமிழில் நான் ஈ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது வால் போஸ்டர் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் ஹிட் படத்தின் மூன்று பாகங்களையும் தயாரித்து வெற்றி கண்டார். அடுத்ததாக அவரது நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதை தண்டரோ படத்தை இயக்கிய முரளிகாந்த் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகையாக இருக்கும் ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஒப்பந்தத்தில் அவர் இன்னும் கையெழுத்து போடவில்லை என்றாலும் கதை அவருக்கு பிடித்து விட்டதாக நடிகை தரப்பில் கூறப்படுகிறது.