சேயோன் படத்தின் கிளிம்ஸ் வெளியீடு
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் நேற்று முன் தினம் வெளியானது.அதனைத் தொடர்ந்து நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. மதுரை பின்னணியில் பரபரப்பாக உருவாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதோடு நேற்று காலை 5.30 மணிக்கு தனது மனைவி ஆர்த்தியுடன் திருவண்ணாமலை கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.41வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Prev Post
Next Post