Take a fresh look at your lifestyle.

கபுள் பிரண்ட்லி – விமர்சனம்

153

கஃபுல் பிரண்ட்லி – விமர்சனம்
இன்டீரியர் நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வரும் சந்தோஷ் சோபன் மற்றும் ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ,மானசா வாரணாசி இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே வீட்டில் தங்கி ஒன்றாக பயணிக்கிறார்கள். அதன் பின்னர் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். அந்த நேரத்தில் மானசாவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு அழைத்து சென்று விடுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
இயக்குனர் பாண்டியராஜின் உதவியாளர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கியுள்ள இந்த படம்,காதல் கதை என்றாலும், முன்னேற துடிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றி பேசும் படம், அவற்றை எல்லாம் கடந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம், என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.
ஹீரோ சந்தோஷ் சோபன், தமிழுக்கு புதிய முகம் என்றாலும், தன் நடிப்பு மூலம் கவர்கிறார். ஹீரோயின் மானசா வாரணாசி, தன் நடிப்பால் வியக்க வைக்கிறார்,யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் மனதில் நிற்கிறார்.
தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவு, ஆதித்யா ரவீந்திரனின் இசை படத்திற்கு பலம்.