Take a fresh look at your lifestyle.

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பாக்கியஸ்ரீ போஸ்

147

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பாக்கியஸ்ரீ போஸ்
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் முதலில் திட்டமிட்டார். ஆனால், அப்படம் தயாராக நீண்ட நாட்களாகும் என்பதால், அத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் ஒரு படத்தை ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளார்.இதற்க்கான ப்ரோமோ படப்பிடிப்பு மதுரையில் முடிந்து விட்டது. இதனை சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளார். இதில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவர் அறிமுகமாகும் நேரடி தமிழ் படமாகும்.‘காந்தா’ படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் பாக்யஸ்ரீ போஸ் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தினை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதன் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.