Take a fresh look at your lifestyle.

க்ராணி-விமர்சனம்

95

க்ராணி-விமர்சனம்
லண்டனில் இருந்து கிராமத்திற்கு திரும்பிய ஒரு இளம் தொழில்நுட்ப தம்பதியினர், தங்கள் மூதாதையர் வீட்டிற்குள் நுழையும் போது மயக்கமடைந்த நிலையில் வயதான வடிவுக்கரசியைபார்க்கிறார்கள். அவர் யார் என்று தெரியாமல் அவருக்கு உதவி செய்ய
முயற்சிக்கிறார்கள். சில நாட்களில் அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. மேலும் தொழில் அதிபரின் குழந்தைகள் ஆபத்தில் சிக்குகிறது. அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயம் என்ன? வடிவுக்கரசி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை. பாட்டியாக நடித்துள்ள வடிவுக்கரசி,குறைந்த டயலாக் பேசி, பார்வை, உடல் மொழி மூலம் பயத்தை உருவாக்குகிறார். ஆனந்த் நாக், அபர்ணா இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். திலீபன், சிங்கம் புலி, கஜராஜா ஆகியோரின் நடிப்பு ஓகே. வழக்கமான ஹாரர் கதையை அதிக ஜம்ப் ஸ்கேர் இல்லாமல் இயக்கி உள்ளார் இயக்குனர் விஜய குமரன். இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சுவாரஸ்யம் இல்லை. மணிகண்டனின் ஒளிப்பதிவு, செல்லையா பாண்டியனின் பின்னணி இசை கை கொடுத்துள்ளது.