தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தை அவரின் வெண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் தனுஷின் 55 வது படமாக உருவாகிறது. இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை வெளியானது. தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன் மியூசிக் டைரக்டராகவும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் சாய் அபயங்கர் உருவெடுத்துள்ளார்.
Prev Post