Take a fresh look at your lifestyle.

சிம்புவுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்​குர்

93

சிம்புவுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்​குர்
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து இயக்​கும் படத்தில் சிலம்​பரசன் நடிக்க இருக்​கிறார்.இப்​படத்​துக்கு ‘காட் ஆஃப் லவ்’ எனப் பெயரிடப்​பட்​டுள்ளது. ஏஜிஎஸ் நிறு​வனம் தயாரிக்​கும் இப்​படத்தின் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் சிலம்​பரசன் ஜோடி​யாக மிருணாள் தாக்​குர் நடிக்க இருப்​ப​தாக​வும் அனிருத் இசையமைக்க இருப்​ப​தாக​வும் கூறப்படுகின்றன.