Take a fresh look at your lifestyle.

விஜய் தேவர​கொண்​டா, ராஷ்மிகா நடிக்கும் ‘ரண​பாலி’

98

விஜய் தேவர​கொண்​டா, ராஷ்மிகா நடிக்கும் ‘ரண​பாலி’
விஜய் தேவர​கொண்​டா, ராஷ்மிகா மந்​தனா நடிக்​கும் படத்துக்கு ‘ரண​பாலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கீதகோவிந்​தம்’, ‘டியர் காம்​ரேட்’ படங்​களுக்​குப் பிறகு இருவரும் ஜோடி சேரும் படம் இது. இதை ராகுல் சங்கிருத்யன் இயக்​கு​கிறார். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இதில் ‘தி மம்​மி’ படம் மூலம் பிரபல​மான அர்னால்ட் வோஸ்​லூ, சர் தியோடோர் ஹெக்​டர் என்ற பிரிட்​டீஷ் அதி​காரி​யாக நடிக்​கிறார். நீரவ் ஷா ஒளிப்​ப​திவு செய்​கிறார்.1850-களில் நடந்த உண்மை சம்​பவங்​களை அடிப்படையாகக் கொண்ட படம் இது.பல உண்​மைச் சான்​றுகள், வாய்மொழி வரலாறுகள், காலப்​போக்​கில் ஒடுக்​கப்​பட்ட ஆவணங்களை அடிப்படை யாகக் கொண்டு எடுக்கப்பட்டு ள்ளது. இப்​படம் செப்​டம்பர் 11-ல்​ வெளி​யாக இருக்​கிறது.