Take a fresh look at your lifestyle.

திரௌபதி 2 -விமர்சனம்

102

திரௌபதி 2 -விமர்சனம்
ரிச்சர்ட் ரிஷி தனது குழந்தையுடன் வாழ்ந்து வரும் இடம் வக்பு வாரியம் மூலம்பறிபோகும் நிலை ஏற்படுகிறது. இதை எதிர்த்து ரிச்சர்ட் ரிஷி ஊர் மக்களை ஒன்று திரட்டுகிறார். இந்நிலையில் கிராமத்திற்கு வரும் ரக்ஷனா இந்து சூடன் அங்குள்ள கோவிலை பராமரிக்க முடிவு செய்து கோவிலுக்கு செல்கிறார். அப்போது திடீரென அவரது உடம்பில் அமானுஷ்ய சக்தி நுழைந்து விடுகிறது. இதை தொடர்ந்து நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
14ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்த வீர வல்லாள தேவன் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. இருப்பினும் கேரக்டர்களின் அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். வீர சிம்ம கடவராயராக பிடித்துள்ள ரிச்சர்ட் ரிஷி அந்த கேரக்டரை அழகாக திரையில் பிரதிபலித்து உள்ளார். திரௌபதி கேரக்டரில் நடித்துள்ள ரக்ஷனா இந்து சூடன் உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.வீர வல்லாளத் தேவனாக அசதி இருக்கிறார் நட்டி. மேலும் சுல்தானாக சிராக் ஜானி மிரட்டி உள்ளார். ஜிப்ரானின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே ரகம்.