Take a fresh look at your lifestyle.

100 கோடி வசூல் செய்த பராசக்தி

103

100 கோடி வசூல் செய்த பராசக்தி
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ‘பராசக்தி’ படம். ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் இப்படம் 27 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. தொடர்ந்து விடுமுறை என்பதாலும் வேறு படங்கள் இல்லாததாலும் இதன் வசூல் அதிகரித்தது. பத்து நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ‌ அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் டாக்டர் மாவீரன் அயலான் அமரன் மதராசி ஆகிய படங்கள் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.