விக்ராந்த் நடிக்கும் ‘எல்பிடபுள்யூ
விக்ராந்த் நடிப்பில் ‘எல்பிடபுள்யூ(லவ் பியாண்ட் விக்கெட்) என்ற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஜனவரி 1-ம் தேதி வெளியாகிறது. அருணா ராக்கி, கதை எழுத கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இதில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ்,அயாஸ் கான், அக் ஷதா, நவீன், நிகில் நாயர், விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆபீஸ், ஹார்ட் பீட் ,போலீஸ் போலீஸ் போன்ற வெப் தொடர்களைத் தொடர்ந்து கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘எல்பிடபுள்யூ என்ற புதிய தொடரை ஹாட்ஸ்டார் அறிமுகப் படுத்துகிறது. அட்லி ஃபேக்டரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் மூலம் விக்ராந்த் அறிமுகமாகிறார். இது குறித்து விக்ராந்த் கூறும்போது, “எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டுடன் ஓடிடி தளத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட்உடன் இருக்கும் ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த இத்தொடர் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றார்.
Next Post