டீசரில் சாதனை படைத்த ‘கரிகாடன்’
கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘கரிகாடன்’ படத்தின் டீசர் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக ‘கரிகாடன் ‘உருவாகியுள்ளது. இப்படத்தில் காடாநடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி, குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கில்லி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
Prev Post