பயிற்சி, முயற்சியால் புதிய பட வாய்ப்புகளை பெறும் ஜோஷினா
சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால் நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் ஜோஷினா.சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது முயற்சியால் கதாநாயகி வாய்ப்பைப் பெற்றார். ‘நாட் ரீச்சபிள்’ என்ற படத்தில் புது முகமாக அறிமுகமான இவர்,அதன் பிறகு கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் ‘மிடில் கிளாஸ் ‘படம். அடுத்து ‘துச்சாதனன் ‘ என்கிற படமும் கிடைத்தது.அடுத்து வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கும் புதிய படமான ‘சூட்கேஸ் ‘படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.சினிமாவில் நிலைத்து நிற்கும்படியான தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள உரிய பயிற்சி மற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
Prev Post