பவீஷ் நடிக்கும் பட டைட்டில் “லவ் ஓ லவ்”
பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்திற்கு லவ் ஓ லவ் என டைட்டில் வைத்துள்ளனர்.இதில் ஹீரோயினாக தெலுங்கு யூடியூப் உலகில் பிரபலமாக இருக்கும் நாக துர்கா தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.இந்த படத்தை ஷினிமா மீடியா அண்ட் எண்டர் டெயின்மென்ட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் எண்டர் டெயினர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
Next Post