மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. கிராந்தி குமார் இயக்கம் இதில் மோடியாக நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் மோடியின் வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது.சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்று உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஹீராபென் மோடியின் ஆழமான பந்தத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்திலும் தயாராகிறது.
Prev Post