Take a fresh look at your lifestyle.

ஃபர்ஸ்ட் கிஸ் குறித்து விடிவி கணேஷ் கல கல பேச்சு

42

ஃபர்ஸ்ட் கிஸ் குறித்து விடிவி கணேஷ் கல கல பேச்சு
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘கிஸ்’ படம் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
இதில் நடிகர் விடிவி கணேஷ் பேசியது, ‘பீஸ்ட்’ படத்தில் சதீஷூடன் நான் நடித்த லிஃப்ட் சீன் தெலுங்கில் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். கிஸ் என்றதும் எனக்கு கிடைத்த முதல் முத்தம் தான் நியாபகம் வருகிறது. மகாபலிபுரம் கடற்கரையில் பிரெஞ்ச் பெண் ஒருவரிடம் கேட்டு வாங்கிய முத்தம். என் வாழ்க்கையில் அதை மறக்க மாட்டேன். படக்குழுவினர் எல்லோருமே ஜாலியாக வேலை பார்த்திருக்கிறார்கள் என்றார்.