100 கோடி வசூலை கடந்த மிராய்
தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. நடித்த மிராய் படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத், கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் 2வது படமாகும். புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இப்படம் முதலிடத்தில் உள்ளது.அத்துடன், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 2 மில்லியன் கிளப்பைத் தாண்டியுள்ளது.
Next Post