Take a fresh look at your lifestyle.

’மகுடம்’ படத்தை இயக்கும் விஷால்: இயக்குநர் ரவி அரசுக்கு என்னாச்சு?

35

’மகுடம்’ படத்தை இயக்கும் விஷால்: இயக்குநர் ரவி அரசுக்கு என்னாச்சு?
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ . இதில் துஷாரா விஜயம் ஹீரோயினாக நடிக்கிறார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். பி.சவுத்ரி தயாரிக்கிறார். ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வந்த நிலையில்,‘மகுடம்’ படத்தில் நடிப்பதோடு, படத்தை விஷால் இயக்கவும் செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்ததில் ரவி அரசு இயக்குனரால் ஏற்பட்ட பிரச்சனைகள் அவர் செய்த தவறுகளால் தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது. தன்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர் எந்த விதத்திலும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடாது என்று நடிகர் விஷால் கூறியதுடன், இனி படத்தை தானே இயக்கி முடிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தற்போது ‘மகுடம்’ படத்தை அவரே இயக்கி வருகிறார். செட்டில் அவர் இயக்கி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.