இரட்டை குதிரையில் சவாரி செய்யும் தேவ்
ராட்சசன், ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ஆக்சஸ் பிலிம் பேக்டரி. இந்நிறுவனத்தின் நிறுவனராக இருந்த டில்லிபாபு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார்.இதைத் தொடர்ந்து அவரது சகோதரி மகன் தேவ், ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏற்கனவே தேவ் பல படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளார். தற்போது யோலோ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் நடிகர் தேவ் கூறியது, வெளி தயாரிப்பில் நான் நடித்தது புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து நடிகராகவும் ஆக்சிஸ் பிலிம் பேட்டரி நிர்வாகியாகவும் இருப்பேன். அடுத்ததாக எங்கள் கம்பெனி தயாரிப்பில் 2 படங்களில் நடித்துள்ளேன். அதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேசுடன் இணைந்து நடித்த வளையம் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதோடு சஸ்பென்ஸ் ஹாரர் படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். இது தவிர முனிஷ் காந்த் நடிக்கும் மிடில் கிளாஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறோம் என்றார்.
Prev Post
Next Post