Take a fresh look at your lifestyle.

ஒரு நாள் இயக்குனரான விஷால்

39

ஒரு நாள் இயக்குனரான விஷால்
விஷால் நடிக்கும் புதிய படத்தை ரவி அரசு இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர்களு‌ க்கும், படக் தயாரிப்பு குழுவைசேர்ந்த ஒருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த ரவி அரசு, நடந்ததை விசாரித்துவிட்டு உதவி இயக்குனருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதலில் முடிந்தது. இதைத் தொடர்ந்து ரவி அரசு மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறினர். இதனால் அன்று படமாக்க வேண்டிய காட்சிகளை விஷாலே இயக்குனராக மாறி படமாக்கி உள்ளார்.அதன் பின்னர் ரவி அரசு, படக்குழுவினரிடம் விஷால் சமாதானம் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.