கயலாக மாறிய நித்யா மேனன்
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.அருண் விஜய் வில்லன் கேரக்டரில் நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் ஆகியோரும் நடித்து உள்ளனர். வரும் அக்டோபர் 1-ந்தேதி படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் கேரக்டர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வரும் தனுஷ், அந்த வகையில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் நித்யா மேனன் இதிலும் கயலாகவே மாறி உள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் நிதி வெளியிடுகிறார்.
Prev Post
Next Post