Take a fresh look at your lifestyle.

நடிகர் சரவணனின் விநாயகர் பக்தி

151

நடிகர் சரவணனின் விநாயகர் பக்தி
90களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சரவணன்,பருத்திவீரன் படத்தின் மூலம் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக மாறினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சட்டமும் நீதியும் வெப் தொடர் பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் அவரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் வட்டக்காடு கிராமத்தில் உள்ள அவரின் தோட்டத்தில் சுயம்புவாக கிடைத்த விநாயகருக்கு அங்கு கோவில் கட்டியுள்ளார். ஸ்ரீ வெற்றி விநாயகர் என்ற அந்த கோவில் கும்பாபிஷேகம் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது.அதோ அங்கு கட்டப்பட்டுள்ள புதிய படப்பிடிப்பு தளத்தை இயக்குனர் பாண்டிராஜ் திறந்து வைக்கிறார்.