மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம்
மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் யாருமே எதிர்பாக்காத அளவில் வெற்றி பெற்ற 200 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்த நிலையில் இயக்குனர் சிதம்பரம் தற்போது பாலன் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. படத்திற்கு சுசின் சியாம் இசை அமைக்க, சைஜு காலித் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதோடு வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தையும் கே.வி.என்.நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Prev Post