26 ஆண்டு சினிமா பயணம் : பூரிக்கு விஜய் சேதுபதி பாராட்டு
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ஸ்லம் டாக். பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பவன் கல்யாண் நடித்த பத்ரி படத்தின் மூலம் பூரி ஜெகன்நாத் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கினார். அதிலிருந்து தற்போது வரை 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த தருணத்தில், விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் தனது இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்.
Prev Post