ஃபேமிலி சப்ஜெக்ட்ல நடிக்கும் கவின்
நடிகர் கவின் தற்போது நயன்தாராவுடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து குடும்பப் பாங்கான கதையில் கவின் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை பியாண்டு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் 2வது படமாகும். குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு,சமகால வாழ்க்கை முறை, உறவுகளின் நுணுக்கம் பேசும் படமா உருவாகிறது. இப்படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவம் கொண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் இணையவுள்ளனர்.
Prev Post