வரும் 17ம் தேதி ரூம் பாய் படம் ரிலீஸ்
ஏசிஎம் சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படம் ” ரூம் பாய் ” இதில் நிகில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹர்ஷா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, இன்ஸ்டா புகழ் கற்பகம் மற்றும் கவிதா விஜயன் உட்பட பலர் நடித்துள்ளனர்.இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.இந்தப் படத்திற்கு சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்ய,வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜெகன் ராயன் இயக்கியுள்ளார் .பேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கி உள்ள இந்த படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Prev Post