Take a fresh look at your lifestyle.

டெலிகிராம் தடை விவகாரம் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

1

டெலிகிராம் தடை விவகாரம் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் Telegram மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் Rahul Gandhi மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.”திருடனை பிடிப்பதற்கு பதில், பாதிக்கப்பட்ட வீட்டையே பூட்டுவது சரியான தீர்வா? டெலிகிராம் தடைதான் வினாத்தாள் கசிவை தடுக்க மத்திய அரசின் தீர்வா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி மற்றும் படிப்பிற்காக டெலிகிராமை நம்பியுள்ளனர். அடுத்து எதைத் தடை செய்யப் போகிறார்கள்? வாட்ஸ்ஆப்பையா?” என்றும் விமர்சித்துள்ளார். “நாடகங்களை நிறுத்திவிட்டு, வினாத்தாள் கசிவு மாஃபியா கும்பல்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கும்பல்கள் அரசின் நிழலில்தான் வளர்கின்றன” எனவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், டெலிகிராம் மீதான நடவடிக்கையை எதிர்த்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.