Take a fresh look at your lifestyle.

ஜிகர்தண்டா’ XX விமர்சனம்

289

ஒரு கேங்ஸ்டரும் சினிமாத் துறையிலிருந்து வரும் ஒருவரும் எதிர்பாராத சூழலில் சந்திக்கிறார்கள். பிறகு ஒரு சினிமா எடுக்கிறார்கள். அந்தப் படமும், அந்தப் படம் எடுக்கும் பணியும் அவர்கள் வாழ்வை எப்படி மாற்றுகிறது என்பதுதான் முதல் ஜிகர்தண்டா படத்தின் ஒன்லைன்.

ஆனால், ஜிகர்தண்டா x x ல்பேசப்படும் விஷயம் வேறாக இருக்கிறது

கதை நடக்கும் காலகட்டம் வேறாக இருக்கிறது படம் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது

ஜிகர்தண்டா வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு நடுவில் பல படங்களை இயக்கியிருக்கிறார் இயக்குனர். அதில் கிடைத்த அனுபவங்கள், இந்தப் படத்தை எடுக்க உதவியுள்ளது என்று சொல்லலாம்.

பழங்குடி, சிறு தெய்வம், காடு, கௌபாய், ஆங்கிலம் பேசும் காவல்துறை அதிகாரி எனப் பல விஷயங்கள் இருப்பது வித்தியாசம் .

இந்தப் படம் 1970களில் நடப்பதைப் போல எடுத்துள்ளார் இயக்குனர் அதற்கான தேவை கதையில் இருக்கிறது. இந்தக் கதையில் அதற்கான காரணமும் கதையில் இருக்கிறது.

காடு, மலை சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பழங்குடியின் கதை யானைகளைப் பற்றிய பேசுவது பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்கள். அதற்குள் அரசியல் யானைத்தந்தம் கடத்துவது என கதைக்களம் செல்கிறது

jஎஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் கூட்டணி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அசத்தல் திரைக்கதையை கொடுத்து மிரட்டி இருக்கிறார்.

அதிலும் அந்த இடைவேளை காட்சி புல்லரிக்கும் வகையில் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அதேபோன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் பாதி பக்கம் என்டர்டெயின்மெண்ட் என்றால் இரண்டாம் பாதி முழு எமோஷனலாக செல்கிறது.

ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் மற்றும் இன்வெனியோ ஆரிஜின் ஆகியவற்றின் கீழ் கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன் மற்றும் அலங்கார பாண்டியன் ஆகியோர் இத்திரைப்படத்தினைத் தயாரித்துள்ளனர்.

மிகுந்த பொருட்சிலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு அட்சய பாத்திரமாய் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை

ஜிகர்தண்டா (2014) படத்தின் வெளி வந்த தொடர்ச்சியான இத்திரைப்படத்தில் ரசிக்க நிறைய இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் கொபாய் படங்களை போல் ஹாலிவுட் படங்களை போல் இசையில் மிரட்டி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன் மாமதுரை பாடல் செம குத்து

நடிப்பு
ராகவா லாரன்ஸ்
பேய் படங்களையே நம்பி காலம் தள்ளி வந்த ராகவா லாரன்ஸுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனை தன்னால் மற்ற படங்களிலும் கதைக்களம் சார்ந்த படங்களிலும் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இடைவேளைக்கு பிறகு வரும் எமோஷனல் காட்சிகள் ராகவா லாரன்ஸ் க்கு நல்ல கைதட்டல்களை வாங்கி கொடுத்திருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் அற்புதமாக நடித்திருக்கிறார் லாரன்ஸ்

எஸ். ஜே. சூர்யா
நடிப்பு அரக்கன் என பெயர் பெற்றுள்ள இவர் நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஒரு கொலையை நேரில் பார்த்தால் நடுங்கும் இவர் நான்கு கொலைகளை செய்து விட்டார் என்றால் நம்ப முடியாது அதுபோல சிறையில் இருந்து மீண்டும் வெளியே வருவதற்கு பயங்கர கேங்ஸ்டர் ஆன லாரன்ஸிடம் கதை சொல்லும் போது அசத்துகிறார்லாரன்ஸ் மனைவி அன்பு காட்டும் பொழுது பாசமலர் போல உருகிப் போவது கிளைமாக்ஸ் காட்சியில் மலைவாழ் மக்கள் மடிந்து போவதைக் கண்டு கண்ணீரோடு படம் பிடிப்பது இப்படி படம் முழுக்க அசத்தி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா

ஒளிப்பதிவு
எஸ். திருநாவுக்கரசு
காடுகளையும் மலைகளையும் பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் அதேபோல மதுரையில் 1975ல் நடக்கும் கதைக்களம் என்பதால் அந்த பின்னணியையும் ஒளிப்பதிவாளர் சிறப்பாக செய்துள்ளார் ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கெட்டு அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்

படத்தொகுப்பு
ஷபீக் முகமது அலி
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் இன்று மூன்று மணி நேரம் படம் பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அலுப்பாக இருக்கும்
தேன் என்றாலும் அது திகட்டத்தானே செய்யும் மற்றபடி காட்சிகளோ கதையை கொண்டு சென்றதிலோ பட தொகுப்பாளரின் திறமை பாராட்ட வேண்டியது

இந்த படம் எல்லா இடத்திலும் வெற்றி தடம் பதிக்கும் என்பது உறுதி

நிமிஷா சஜயன்
லாரன்ஸின் மனைவியாக மலைவாழ் மக்களின் அன்பு புதல்வியாக வருகிறார் அவருடைய காட்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது அவர் பேசும் டயலாக் டெலிவரியும் அவருடைய மேக்கப்பும் படத்தோடு ஒன்று செய்து விடுகிறது படம் முழுக்க நிறைமாத கற்பனையாக வந்து பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார் கிளைமாக்ஸ் கட்சியில் கூட அவர் நம் கண்களை விட்டு விலகாத அளவுக்கு அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார் நிஷா

நவீன் சந்திரா
கொடுமையான காவல்துறையாக அதிகாரியாக ஆரம்பக் காட்சிகளில் வந்து அஸ்தி இருக்கிறார் படம் முழுக்க அவர் அசால்டாக மலைவாழ் மக்களை துன்புறுத்தும் அந்த அதிகார தோரணையும் துஷ்பிரயோகமும் கொடூர சிந்தனையும் வெளுத்து கட்டி இருக்கிறார் நவீன் சந்திரா

சத்யன்
எஸ் ஜே சூர்யா வின் நண்பராகவும் பவா செல்லதுரை இடம் துணை இயக்குனராகவும் இவர் காட்சிகள் படத்திற்கு கலகலப்பு

இளவரசு
அமைச்சராக வந்து ஒரு முதல்வரிடம் செருப்படி வாங்கும் அளவுக்கு மலிவான கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக செய்திருக்கிறார்
பவா செல்லதுரை படத்தின் இயக்குனராக வந்து கிளைமாக்ஸ் காட்சியில் முக்கிய பங்கு வைக்கிறார்
: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் தனது கதை மற்றும் திரைக்கதையை நம்பி வித்தியாசமான படங்களை கொடுப்பது தான் ஒரு இயக்குநரின் கடமை என்கிற முழு முயற்சியில் இறங்கி இப்படியொரு படைப்பை கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்

கதை களம்
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கிறார். அவருக்கு எதிராக இளவரசு அரசியல் செய்து வருகிறார். ஷைன் டாம் சாக்கோவின் சாம்ராஜ்யத்திற்கு 4 ரவுடிகள் நான்கு இடங்களில் தூண்களாக உள்ளனர். அவர்களை ஒவ்வொருவராக தூக்க திட்டம் போட்டு தூக்குகின்றனர். அப்படி மதுரையில் இருக்கும் ரவுடி தான் நம்ம லாரன்ஸ். அவரை காலி செய்யவும் ஆள் அனுப்பப்படுகிறது. சினிமாவில் ஆர்வம் இருக்கும் லாரன்ஸ் எஸ்.ஜே. சூர்யாவிடம் தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க சொல்கிறார். ராகவா லாரன்ஸுக்கு போட்ட ஸ்கெட்ச் வொர்க்கவுட் ஆனதா? எஸ்.ஜே. சூர்யாவின் பின்புலம் என்ன? ராகவா லாரன்ஸ் இறுதியில் என்ன ஆகிறார் என செம அழகாக படத்தை செதுக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அவருக்கு கம்பேக் படம் தான். எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல தனது மிடாஸ் டச்சை இந்த படத்திலும் கொடுத்து கார்த்திக் சுப்புராஜுக்கும் லாரன்ஸுக்கும் கம்பேக் கொடுக்க வைத்துள்ளனர் சினிமா ஒரு நாட்டின் அரசியலையே மாற்றும் சக்தி கொண்டது என்பதை நிஜத்தில் நிரூபித்துள்ளது. அதை சினிமாவில் காட்டி அதன் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்கிற முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

75களில் நடக்கும் கதை என்பதால் பீரியட் போர்ஷனுக்கு பலரும் பல மெனக்கெடல்களை போட்டுள்ளனர்.

கடைசி 20 நிமிடம் படம் வேறு மாதிரி இருக்கிறது

நிறைகள்

மதுரையின் பிரபல ஜிகர்தண்டா க்ளப்பின் தலைவன், தென் மாவட்டங்களை கண்ட்ரோலில் வைத்திருக்கும் ரவுடி ‘அல்லியன் சீசர்’ கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ்.
நடிப்பு

சந்தர்ப்ப வசத்தால் கொலையாளியாக மாற்றப்பட்டு ஜெயிலுக்கு செல்லும் எஸ்.ஜே.சூர்யா
நடிப்பு

அல்லியன் சீசரை கொன்றால் சிறையிலிருந்து விடுதலை, அவர் ஆசைப்பட்ட போலீஸ் வேலை என இரண்டு ஆஃபர் வருகிறது. உள்கட்சி அரசியல் – காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பகடைக்காயாக அனுப்பி வைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா,
வின் கதாபாத்திரம்

போட்டி மனப்பான்மை, பிரபல ஹாலிவுட் நடிகர் ‘க்ளிண்ட் ஈஸ்ட்வுட்’ மேல் இருக்கும் மோகம் ஆகியவற்றால் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோவாக ஆசைப்படும் சீசரிடம், சினிமா இயக்குநராக நடித்து அறிமுகமாகி அவரை படம் எடுக்க ஒப்பந்தம்ஆகும் காட்சி

‘தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ’ எனும் டேக்லைனுடன் ரஜினிகாந்தை நினைவூட்டும் பாத்திரத்தில் லாரன்ஸ் நூற்றுக்கு நூறு பொருத்தம். பார்வையால் மிரட்டும் ரவுடி, ஈகோ தலைதூக்கி ஹீரோவாக ஆசைப்படுவது, டைரக்டர் வேட்டை நடத்துவது, க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பாணியில் திரையரங்கில் ரவுடிகளை போட்டுத் தள்ளுவது என முதல் பாதியில் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

எமோஷனல் காட்சிகளில் ஆங்காங்கே யோசிக்க வைத்தாலும் கார்த்திக் சுப்பராஜின் ட்ரேட் மார்க் மதுரை ரவுடியாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

கிளைமாக்ஸ் கட்சியில் எதார்த்தத்தை புரிந்து கொண்டு காவல்துறையிடம் மோத முடியாது என்று ஒவ்வொருவரும் மரணத்தை தழுவும் அந்த காட்சிகள் மனதில் நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறது

சின்ன வயதில் யானையை காப்பாற்றிய எல்லாரும் நன்றி உணர்வோடு யானை கூட்டம் நன்றி செலுத்தும் அந்த காட்சிகள்

வில்லனும் யானையும் மோதும் அந்த சண்டைக் காட்சி புல்லரிக்க வைக்கிறது

நவீன் சந்திராவின் வில்லத்தனமும் மலைவாழ் மக்களிடம் காட்டும் அந்த குரோதமும் பாவப்பட வைக்கிறது

அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் அதற்கு பலவாக்கப்படும் மலைவாழ் மக்களும் பரிதாபப்பட வைக்கிறார்கள்

படத்தில் வசனம் எழுதியுள்ள கார்த்திக் சுப்புராஜ் முள்ளிவாய்க்கால் போரில் மடிந்து போன மக்களை ஞாபகப்படுத்துகிறார் போரில் எப்பொழுதுவென்றார்கள் என்ற வசனமும் அதையே குறிப்பிடுவது போல் இருக்கிறது

ஒரு மூன்று மணி நேரசினிமா 30 வருஷம் அரசியலிலே மூழ்கடித்து விடுகிறது அப்படி என்றால் சினிமாவிற்கு இருக்கும் சக்தி என்ன என்பதை இயக்குனர் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்

எஸ்.ஜே. சூர்யாவும் ஷீலாவும் முதல் காட்சியில் காதலிக்கிறார்கள் முடிவில் என்ன ஆனார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது

படத்தின் குறைகள்
படம் ஆரம்பத்தவுடன் லாரன்ஸ் இடம் கதை சொல்லி அவரை கவிழ்த்து கொலை செய்வது தான் திட்டமாக இருந்தாலும் படம் முடியும் தருவாயில் அது மலைவாழ் மக்களிடம் சென்று விடுகிறது

படத்தின் நீளம் ஒரு 15 நிமிடமாக குறைத்திருக்க வேண்டாமா?

1975 களில் ஃபேன் இந்திய படம் இருந்ததாக நமக்கு ஞாபகம் இல்லையே?

மொத்தத்தில் இந்த ஜிகர்தண்டா சுவை குறையாமல் இருக்கிறது இரண்டு வருட உழைப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைவான படப்பை தந்திருக்கிறது 1975 கட்டங்களில் நடக்கும் இந்த சம்பவங்களை கண் முன்னே கொண்டு வந்தது போல் இருக்கிறது நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள் லாரன்ஸ் சூர்யாவும் இயக்கத்தில் புதிய பாணியை கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் இசையமைப்பில் பறையொலி கொம்பு ஊதும் சத்தங்களோடு வித்தியாசமான இசையை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன் படத்தின் ஒளிப்பதிவு ஆர்ட் டைரக்டர் மற்றும் காஸ்ட்யூமர் மேக்கப் மேன் என எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள் மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வந்து இருக்கிறது என்பது சந்தேகமாக இல்லை. லாரன்ஸ் வில்லனும் மோதும் அந்த காட்டுக்குள் சண்டைக் காட்சி செம பரபரப்பு