Take a fresh look at your lifestyle.

இரண்டு வானம் ரிலீஸ் அப்டேட்

3

இரண்டு வானம் ரிலீஸ் அப்டேட்
முண்டாசுப்பட்டி, ராட்சசன்” படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ,இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “இரண்டு வானம்”. முண்டாசுப்பட்டியில், கிராமத்து கதையாக காமெடியாக எடுத்து ஹிட் கொடுத்த இக்கூட்டணி, அடுத்து ராட்சசன் படத்தை கிரைம் திரில்லராக எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த படமும் ஹிட் ஆனதால், இவர்களின் கூட்டணியில் தற்போது காதல் படமாக “இரண்டு வானம்” உருவாகியுள்ளது. இதில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். கொடைக்கானலில் 150 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படம் அக்டோபர் 23ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மமிதா பைஜூ சமீபத்தில் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்தலகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்கள் ஹிட்டானதால் இதுவும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.