‘ அன்பே டயானா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’.இதில் நிக் பட புகழ் ரம்யா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். மேலும் சேத்தன்,யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்ய,பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் சார்பில் சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Next Post