அடிப்பதற்கு போலீஸ் எதற்கு – மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டம்.
அடிப்பதற்கு போலீஸ் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள்.
அஜித்குமாரை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கவில்லை?
நகை காணாமல்போன வழக்கு யாருடைய உத்தரவின்பேரில் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது?.
உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது.
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கின்றனவா?
சிசிடிவியில் பதிவு செய்யக்கூடாது என வெளி இடத்தில் வைத்து அடித்து உள்ளனர்-மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டம் .