Take a fresh look at your lifestyle.

டாக்டர் ராமதாஸ் பயோபிக் படம் நின்றது ஏன்? சேரன் விளக்கம்!

30

டாக்டர் ராமதாஸ் பயோபிக் படம் நின்றது ஏன்? சேரன் விளக்கம்!
சங்ககிரி ராஜ்குமார் இயக்கி நடித்துள்ள படம் ‘ஒன்’.இந்த படத்தின் புரொமோஷனில் இயக்குனர் சேரன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் சேரன் பேசியது, டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்று படத்தை நான் இயக்குவதற்கு முன்பு, அந்த கதையை முதலில் சங்ககிரி ராஜ்குமார் தான் இயக்குவ தாக இருந்தது.ஒரு சில காரணங்களால் அவர் இயக்கவில்லை.ஆனால் இப்போது பார்த்தால் அந்த படம் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை.படம் கடைசியில் நின்று போனது. எங்களின் உழைப்பு எல்லாம் போச்சு.1½ வருடம்கஷ்டப் பட்டோம். ஆனால் படம் நின்றுவிட்டது. இதற்கு அப்பா, மகன் சண்டை போட்ட தான் காரணம். இப்போது அவர்கள் சேர்ந்துவிட்டார்கள், ஆனால் படம் எடுக்க ஆள் இல்லை. என்ன பண்றது… இதுபோல் தான் சினிமா நம்மை எங்கே ஏமாற்றும், தூக்கி வைக்கும் என்பது தெரியாது என்றார்.