Take a fresh look at your lifestyle.

ரூ.200 கோடி வசூலை நோக்கி சூர்யா படம்

32

ரூ.200 கோடி வசூலை நோக்கி சூர்யா படம்
சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் கொசுவை குவித்து வருகிறது. தமிழ், தெலுங்கில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இப்படம் முதல் இரண்டு நாள்களிலேயே உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்தது. முக்கியமாக, அமெரிக்காவில் விரைவாக 1 மில்லியன் டாலர்களைக் கடந்த முதல் சூர்யா படம் என்கிற சாதனையையும் படைத்தது. இந்த நிலையில், இதுவரை அமெரிக்காவில் 1.6 மில்லியன் டாலருக்கும் (ரூ. 15 கோடி) அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிகிறது. இதுவே, அங்கு அதிகம் வசூலித்த சூர்யா படம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதனால் இந்த வார இறுதிக்குள் 200 கோடியை இப்படம் தாண்டும் என கூறப்படுகிறது.